மழை தாண்டி வந்ததும்!
22 மாசி 2023 புதன் 09:05 | பார்வைகள் : 8872
மழை தாண்டி வந்ததும்!
திண்ணையில் விரித்து!
வைக்கப்பட்டிருந்தது குடை!
தரை தொடும் அதன் ஒவ்வொரு!
கம்பிகளும் தரையில்!
விழிநீர் வழிய எழுதிக்கொண்டிருந்தது!
தன் கதைகளை .....!
யாரும் வாசிப்பதற்க்காக இல்லை எனினும்!
தன்னை சுருட்டி ஓரமாய் வைக்கையில்!
சோகங்கள் மறந்து!
தன் கனவின் மடிப்புகளுடன்!
அடுத்த மழைவரைக்கும்!
நிம்மதியாக தூங்கும்படிக்கு


























Bons Plans
Annuaire
Scan