Paristamil Navigation Paristamil advert login

மறை நிலா

மறை நிலா

22 மார்கழி 2022 வியாழன் 13:06 | பார்வைகள் : 11718


நம்புமாறு புனையப்பட்ட கதை - அது 

நீயொரு வெண்ணை உருளை என்று
பின்னர் நம்ப வைக்கப்பட்டது -
யாரோ உன் மேல் கால் தடம் பதித்தார் என்றும்
மாந்தரின் மாபெரும் பாய்ச்சல் அதுவென்றும்...
 
திரிபு கொள்ளும் உன் வடிவியலைக் கண்டு
தனிமையான அந்தி வேளையெல்லாம் கழித்தேன்
எதனால் செய்யப்பட்டாய் நீ?
என்னை உருவாக்க ஏது உன் பணி?
விந்தையோடு விசாரித்திருந்தேன்
 
என் உடலின், என் உணர்வின்
 சுற்றுப்பாதையின் உருவாக்கம் 
யாதென்றறிய எத்தனித்த போது 
போலி ஒளியால் குருடான என் கண்களுக்கு
பிடிபடாமல் உன் வடிவத்தை மாற்றினாய்
 
உள்ளொளியின் துணை கொண்டு
இருளை என் கண்கள் கண்ட போது  
மாறும் உன் வடிவத்தின்  
மர்மங்கள் பலவற்றின் 
முகத்திரையை விலக்கினேன்
 
பிரதிபிம்பமே நீ - 
மாதரின் திரவங்களைக் கையாண்டு
என் பிறவியை இயக்கும் திறன் கொண்டாய்
என் மரணத்திலும் பங்காவாய்
 
என்றும் என் உணர்தலின்
சுழல் கதவாய் நீ உள்ளாய்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்