Paristamil Navigation Paristamil advert login

வானவில்

 வானவில்

27 கார்த்திகை 2022 ஞாயிறு 09:13 | பார்வைகள் : 11405


நீ கருப்பா, பழுப்பா, வெளுப்பா, சிவப்பா 
அல்லது, சரிவர இயங்கும் மூளை கொண்டாயா?
ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திலும் 
வகை வகையாய் தேடுகின்றாய்
தோலின் நிறங்களை மட்டும் நிராகரிக்கின்றாய் 
உன் செருக்கைப் பார்
 
சொர்க்கத்தின் கடவுள் பற்றி 
அறிவிக்கின்றாய் போற்றுகின்றாய் 
ஆனால் அவர் படைப்பை மட்டும் 
எதிர்க்கின்றாய் நிராகரிக்கின்றாய்
 
அறிவற்ற வெறுப்பால்
நம் சொந்தக் குருதியால்
நனைய வைக்கவில்லையா இப்பூமியை நீ?
 
ஓ, மனிதனே!
அன்பு இதயத்தின், இயங்கும் மூளையின் பாதையில் 
எழுந்து நின்று நீ நடைபோடுவாயா?

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்