Paristamil Navigation Paristamil advert login

நிலவு

நிலவு

14 கார்த்திகை 2022 திங்கள் 12:22 | பார்வைகள் : 8296


தகிக்கும் நிலவின் 

தணியாத பித்து - 
அதை உள்ளடக்கி...
நிலா தன்னுள் ஒளித்த
புதிரான மர்மங்களின் 
மூலமுமாகி...
 
நிலவின் குளிர்ச்சி - அதன் 
முடிவற்ற பொழிவானேன்
 
எனதன்பின் வேட்கை 
கொடிய நஞ்சை உண்டது
நிலவின் முழுமையில்
 
முழுநிலவின் அருளொளியில்
முழுவதுமாய் கரைந்துபோக
மற்றொரு அன்புத்துணையை கைவிட்டேன்
 
ஆண்டவன் அருள் என்மேலிருந்தால்
முழுநிலவின் மகோன்னதத்தில் இந்த
கூட்டை உதிர்த்துவிடுவேன் 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்