Paristamil Navigation Paristamil advert login

பருவமழை

பருவமழை

1 கார்த்திகை 2022 செவ்வாய் 14:58 | பார்வைகள் : 12058


கொட்டும் மழையும் செம்மண்ணும் 
கூடி ஒன்றாக கலந்தன - 
தணியாத தாகத்தில் கிளர்ச்சியின் மூட்டத்தில் 
தானென்ற அனைத்தையும் அழித்து
ஒன்றிணைந்து மற்றவரை அறியும்
ஒரே முனைப்போடு இருக்கும்
காதலரைப் போல...
 
தன்னையே அழித்து 
தான் மற்றவராய் தரிக்க வேண்டுமென்ற
தீராத ஏக்கம்...
 
அழியா இறைமையின் கை இவரை பிரித்தது
அழியும் பொம்மைகளாய் பின்னர் சேர்க்கவே
 
செம்மண்ணும் கொட்டும் மழையும் 
சேறாவதற்காக சேரவில்லை -
சேர்ந்தன உயிருக்கு உயிரூட்ட...
இறந்தவை இறந்தவையாய் இருக்க...
 
மரமாய் மலராய் கனியாய் மாற
வானும் மண்ணும்
வாஞ்சையோடு முத்தமிட்டு இணையும் 
இப்பூமியில் உயிர்கள் பெருகும்
இவ்வுயிரில் தான் இறைமையும் ஆர்ப்பரிக்கும்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்