அலைகள்

8 ஐப்பசி 2022 சனி 15:22 | பார்வைகள் : 12192
அலை தீண்டாத மணல்
அங்கே நான் அமர்வதில்லை
அதில் ஒரு பிடிப்பு இல்லை
ஒரு அலை தீண்டிப் போனபின்
மறு அலை வந்து சேரும்முன்
வானம் கொஞ்சம் மிளிர்கிறது
அதன்மீதே
நான் அமர்கிறேன்
அங்கேதான்
எனது வீட்டை கட்டுகிறேன்.
அதுவே இன்னும்
உறுதியாய் இருக்கிறது