வைத்தியம்

22 புரட்டாசி 2022 வியாழன் 13:38 | பார்வைகள் : 12066
மூடிய கல்லறையினுள்
மூச்சு முட்டும் மூலவர்கள்.
`கடவுளை காக்க
மதத்தை காக்கவேண்டும்
மதத்தை காக்க
இனத்தை காக்க வேண்டும்
இனத்தை காக்க
நலிந்தவன் நரம்புகள் அறுத்து
வலிந்தவன் வானெழ வேண்டும்´
சிதையின் சிகரம் ஏறி
சீறி சினந்து சூளுரைத்தவன்
வானவில்லை மறைத்து தலைவனானான்
தூறல் நின்று வானவில் மறைவதற்குள்
மடியில் மறைத்துவைத்த
ஒருபிடி அரிசியும் களவாடப் பட்டிருந்தது.
கடவுளை கூவி அழைத்தனர்
காக்கவில்லை,
மதத்தை தொழுதனர்
பலனில்லை,
இனத்தை வேண்டினர்
எழுந்திருக்கவில்லை,
தலைவனை இறைஞ்சினர்
காணவில்லை.
காக்க இன்னொருவன் வருவானென்று
கடவுள் துகில் கொள்ள சென்றார்
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025