பூ பூத்த மர்மம்

1 புரட்டாசி 2022 வியாழன் 14:34 | பார்வைகள் : 11900
பூ பூத்த மர்மம்
காற்று பலமாகத்தான்
வீசி கொண்டிருக்குகிறது
அருகருகே பூத்து
குலுங்கிய
இரு மரங்கள்
தங்கள் தலையை
ஆட்டியபடி
இரகசியம் பேசி
கொண்டிருக்கின்றன
பக்கத்தில் படர்ந்திருந்த
கொடி ஒன்று
ஒட்டு கேட்க
ஆசை பட்டு
மரத்தின் மேல்
படர்ந்து
காதை வைத்து
கேட்டவுடன்
வெட்கம் தாளாமல்
தலை குனிந்து
இடை நழுவி
மரத்தின் பிடி
விட்டு விழுந்தது
கொடி வெட்கப்படும்படி
மரங்கள்
என்ன பேசி
கொண்டிருந்ததோ ?
இரசமான
விசயமாய்
இருக்கவேண்டும்,
ஒரு வேளை
தான் எப்படி
பூ பூத்தவளானேன்
என்று பேசியிருக்குமோ !
ஏனெனில்
கொடி இரண்டு
மூன்று நாட்களில்
பூத்து
குலுங்க ஆரம்பித்து
விட்டதே…!
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025