பூமி
5 ஆடி 2022 செவ்வாய் 18:13 | பார்வைகள் : 20871
மேலும் இல்லா
கீழும் இல்லா
அண்டவெளியில்
தானும் சுழன்று
சூரியனை சுற்றும்
இந்த பந்து
அழகின் அழகாய்
இருக்கும் இயற்கைகள்
எல்லாம்
பந்தாய் சுருட்டி
காத்து வைத்திருக்கும்
இந்த அழுக்கு கூடு
முக்கால் முழுதும்
நீராய் இருந்தும்
வான் வெளி எங்கும்
சிந்தாமல் சிதறாமல்
எப்படித்தான்
வான் உலகில்
உலவுகிறது
இந்த உருண்டை பந்து ?


























Bons Plans
Annuaire
Scan