Restos du Cœur! பயனாளிகளை மட்டுப்படுத்தவுள்ளோம், நன்கொடையாளர்களுக்கு நன்றி.
8 புரட்டாசி 2023 வெள்ளி 15:32 | பார்வைகள் : 9789
கடந்த ஞாயிற்றுக்கிழமை Restos du Cœur தொண்டு நிறுவனத்தின் தலைவர் Patrice Douret அவர்கள் TF1 தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்; 'தங்கள் நிறுவனம் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியின் மத்தியில் தங்களின் பணியைத் தொடர நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்'
அவரின் அழைப்பு ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது, இதனையடுத்து பலதரப்பட்ட நிறுவனங்கள் நன்கொடை வழங்க முன்வந்ததுள்ளன. 15 மில்லியன் Eurosகளை அரசாங்கம் வழங்குவதாக உறுதியளித்து. அதேபோன்று பிரான்சின் மிகப்பெரிய நிறுவனமான LVMH குழுமத்தின் தலைவர் Bernard Arnault 10 மில்லியன் Eurosகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார், அதேபோல் பிரான்சின் தேசிய உதைபந்தாட்ட குழு 500 000 Euros களை நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.
பால் உணவுகளை தயாரிக்கும் Danone நிறுவனம் ஒரு மில்லியன் பாலாடைக்கட்டிகளை வழங்க முன்வந்ததுள்ளத. இதேபோன்று பல சிறிய நிறுவனங்கள் மட்டுமன்றி தனிநபர்களும், பெரும் பல்பொருள் அங்காடிகளும் தங்கள் உதவிகளை Restos de Coeur நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று France Bleue வானொலியில் நன்றி தெரிவித்த Restos de Coeur நிறுவனத்தின் தலைவர் Patrice Douret அவர்கள். ' மனித நேய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார் குறித்த நன்கொடைகள் இன்றைய அவசரகால நிலையை கடக்க மிகவும் உதவியாக இருக்கும் எனவும், தங்கள் தொண்டு நிறுவனத்தின் எதிர்காலத்தை திடமாக்கும் எனவும் தெரிவித்தார். அதேவேளை பிழையான பயனாளிகளை கண்டறிந்து வெளியேறி, சரியான பயனாளிகளை மட்டுப்படுத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.