விழுதுகள்
3 ஆவணி 2023 வியாழன் 11:54 | பார்வைகள் : 12203
விதையில் இருந்து
வருவது வேர்கள்,
தன் வினைப்பயனை
ஆற்ற விழைவது விழுதுகள்,
விண்ணோக்கி போகும்
திறன் இருந்தும்,
தன்னை தாங்கிய
மண்ணோக்கி செல்வதை
கடமையாக கொண்ட விழுதுகள்,
அகழ்வாரை தாங்கும்
நிலமாக இல்லாவிடினும்,
தன்னை உருவாக்கிய மரத்தை
தாங்கும் விழுதுகள்.
ஆசீர்வாதங்கள் மேலிருந்து
கீழ் நோக்கி போகும்,
விழுதுகளும் அப்படியே..
சில விழுதுகளை மரம் இழந்தாலும்,
அந்த பணியை பங்கிட்டுக்கொள்ள
பலநூறு விழுதுகள் உயிர்ப்புடன் உள்ளன.
மனிதர்கள் கேட்பதனால்
மரம் குடுப்பதில்லை,
விழுதுகளும் அப்படியே,
மரம் கேட்டதனால்
தாங்க வருவதில்லை..

























Bons Plans
Annuaire
Scan