Paristamil Navigation Paristamil advert login

ரீங்காரம்....

ரீங்காரம்....

15 ஆனி 2023 வியாழன் 11:38 | பார்வைகள் : 11488


நட்சத்திரங்கள் நீந்தும்
வானத்தில்
மீன்கள் துள்ளும் கடலும்
 
எப்போதாவது விழுந்து விடாதா
காயோ பழமோ
நிலவோ
 
ஓடும் நதியில்
பாதி தண்ணீர்
மீதி வானம்
 
அறை நுழைந்த வண்டுக்கு
மறை கழன்ற சிரிப்பு
ரீங்காரம் கவனியுங்கள்
 
கிட
முடியாவிட்டால் எழு
நட
முடியாவிட்டால் ஓடு
 
பகலில் பழகும்
இரவில் குரைக்கும்
நாய் நாய் தான்
 
கிணற்றுக்குள் நிலவு
வெள்ளை அடித்த நாளில்
கிணறே நிலவு
 
என்னென்னவோ
சொல்லிப் பார்க்கிறார்
எதுவும் செய்ய முடியாதவர்
 
சிறு வயது ஒப்பனை தேவதை
நடு வயதிலும் போட்டுத் திரிகிறாய்
வேதனை
 
அமிர்தம் எதிர்பார்க்கவில்லை
நீராவது தா
 

வர்த்தக‌ விளம்பரங்கள்