அலகு தீட்டி சுள்ளி முறித்து!
11 ஆனி 2023 ஞாயிறு 09:14 | பார்வைகள் : 10733
காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை!
காக்கையென்று கழித்தாயோ
முற்றம் வந்து குறிசொல்லி!
ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன்
மரக்கிளையில் அலகு தீட்டி!
சுள்ளி முறித்துப் பறக்கும்
ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ!
நான் என்ன குறைந்தவனா?
உற்றுப் பார்க்கும் கண்கண்டு!
கூடு காத்து குழந்தை காத்து
போராடி வாழ்பவன் நான்!
புயல்காற்றில் பேயாடி
பாதகன் நீ பிய்த்தெறிந்த கூட்டுக்குடும்பம்!
வீதியிலே வெட்டையிலே
புத்தளத்துப் புழுதியிலே!
அகதியென அரவணைக்க யாருமில்லை
கொவ்வைப்பழ வாய்விரித்து!
உம்மா என்னும் என்குஞ்சு பொன்குஞ்சு
காற்றாடி களைப்படையும்!
களைப்படையா இறக்கையாலே
சுழன்றாடிக் காத்திருக்கேன்!
மிருகம் நீ
உன் நெஞ்சில் காதலில்லை கவிதையில்லை!
வாழ்வோரை வாழவிட
ஈனஇரக்கமில்லை!
உன்னையும் கொல்லுமது
ஒருபோதும் துப்பாக்கி துணையாகா


























Bons Plans
Annuaire
Scan