Paristamil Navigation Paristamil advert login

காதல் வாயில்..

காதல் வாயில்..

20 பங்குனி 2021 சனி 16:19 | பார்வைகள் : 12849


நாம் இருவரும் 
அருகருகே நின்றும் 
உன் விழி வான்பார்ப்பதும் 
என் விழி மண் பார்ப்பதுமாய் 
மாயங்கள் காட்டி 
சொல்லிடமாட்டானா என்று நானும் 
இவள் பேசட்டுமே என்று நீயும் 
பொய் கோலங்கள் காட்டி 
காலங்கள் கடத்துவதை விடுத்தும்...
விழியோடு விழி நோக்கி 
மனதின் வேட்கையை 
உரைத்திடத் தடையாகும் 
நாணமதைக் கொன்றும்...
மடை திறந்த வெள்ளமென 
மௌனப்  பூட்டுடைந்து 
காதல் வாயில் திறந்திடாதோ....!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்