Paristamil Navigation Paristamil advert login

வாழ்வின் நிஜங்கள் -

வாழ்வின் நிஜங்கள் -

23 மார்கழி 2020 புதன் 17:10 | பார்வைகள் : 9624


உலகில்

ஜனனம் மரணம்
விண்ணும் மண்ணும்
இயற்கைத் தோற்றங்கள்  
வாழ்வின் நிஜங்கள்!
வாழ்வில்
எண்ணங்கள்  நினைவுகள்
நினைக்கும் எண்ணங்கள்
நிறைவேறினால்
வாழ்வின் நிஜங்கள் !
சந்திக்கும்
இன்பங்கள் துன்பங்கள்
விருப்புகள் வெறுப்புகள்
சிந்தித்துப் பார்த்தால்
வாழ்வின் நிஜங்கள்!
கற்பனைகள்  கவலைகள்
காதல்கள்  மோதல்கள்
பழக்கங்கள் வழக்கங்கள்
வாழ்வின் நிஜங்கள் !
சிந்தனைகள் சிரிப்புகள்
உறவுகள் பிரிவுகள்
உண்மைகள் பொய்கள்
வாழ்வின் நிஜங்கள் !
துடிப்புகள் நடிப்புகள் 
படிப்புகள் படிப்பினைகள்
நம்மிடையே இருக்கும்
நம்முள்ளே விளையாடும்
வாழ்வின் நிஜங்கள் !    
 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்