காதலன் புலம்பல்!
6 மார்கழி 2020 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 9939
காதலன் அவளைப் பார்க்கும்போது
அவள் நிலத்தைப் பார்க்கின்றாளே!
காதலன் வானைப் பார்க்கும்போது
அவள் அவனைப் பார்க்கின்றாளே !
காதலனை நேரில் பார்த்தால்
அவள் கண்மலர்கள் வாடியா போகும்?
காதலனிடம் கண்களால் பேசினால்
அவள் கருவிழிகள் கலங்கியா போகும்!
அவள் இதழ் பிரிந்து பேசினால்
பூவிதழ் சுவை குறைந்தா போகும்?
காதலன் அவளைத் தொட்டால்
உணர்வில் மயங்கி விடுவாளா?