Paristamil Navigation Paristamil advert login

காத்திருந்தேன் !

காத்திருந்தேன் !

15 கார்த்திகை 2020 ஞாயிறு 14:16 | பார்வைகள் : 11819


தாய் தந்தையோ

உறவுகளோ
நான் உண்ணும்படி
எதையும் ஊட்டியதில்லை.
நானே
அள்ளித் தின்பேன்.
 
பிறர் தம் குழந்தைக்குக்
கொஞ்சி உணவூட்டும் காட்சியை
மற்றொரு குழந்தையாய்
எதிர்நின்று
தலைசாய்த்து
கண்ணிமைக்காமல் கண்டிருக்கிறேன்.
 
'நீ உண்ணாவிடில்
தோ பார்... அவனுக்குத் தந்துவிடுவேன்’ என்று
என் பக்கம்
பாவனையாய் நீட்டி நீட்டி ஊட்டியதையும்
அந்தப் பண்டம்
அடுத்த நீட்டலில்
எனக்குத் தரப்படலாம் என்ற நம்பிக்கையோடும்
காத்திருந்தேன் !

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்