Paristamil Navigation Paristamil advert login

மழை

மழை

3 கார்த்திகை 2020 செவ்வாய் 15:29 | பார்வைகள் : 13026


ஒருவேளை
மழையின் துளிகளுக்குள்
நெருப்புக்கரு ஒளிந்திருக்குமோ?
புகையோடு விழுகிறதே
 
வாழ்க்கையின் மிகமெல்லிய
தடங்களில் நடந்து பார்க்கிறேன்
மழை நோக்கும்போது
 
முகஸ்துதி செய்வதில்லை
ஒருபோதும் மழை
 
சில நிமிடங்களில்
இதயத்தினூடே
இனிக்கும் உணர்ச்சிகள்
முகில் பூப்பூக்கையில்
 
நகைக்கத் தோன்றுகிறது
மழைத் தூரலுக்குக் குடைதேடும்
மனிதர்கள் காணும்போது

வர்த்தக‌ விளம்பரங்கள்