Paristamil Navigation Paristamil advert login

வாழ்வு கணக்கு

 வாழ்வு கணக்கு

28 புரட்டாசி 2020 திங்கள் 17:04 | பார்வைகள் : 14315


உன்னில் முடித்தலுமில்லை
என்னில் விடிதலுமில்லை
சோகம் தணித்தலுமில்லை
விடை தெரியவுமில்லை
பாசம் அகலவுமில்லை
நேசம் நிலைக்கவுமில்லை
காலம் கனியவுமில்வை
வாழ்வில் நிம்மதியில்லை
வசதி தன்னில் இல்லை
பகட்டுக்கு பஞ்சமுமில்லை
அன்புக்கு குறைவில்லை
அதனால் அனுபவிப்பது 
கொஞ்சம் இல்லை
நெற்றி வியர்வையும் காய வில்லை
வறுமையின் பிடிப்பு குறைய வில்லை
தாங்கி பிடிக்க ஆளுமில்லை
ஏனென்று கேட்க நாதியில்லை
பட்டென்று பேச முடிவதில்லை
பழித்து பேசவும் மனதும் இல்லை
சொல்லுகின்ற சொல்லில் வஞசமில்லை
வஞ்ச மிலா சொல் ஜெயிப்பதில்லை
உண்மை காதலுக்கு மதிப்புமில்லை
பொய்யான காதல் தோற்பதில்லை
பாசம் வைத்த கணவன் வாழ்வதில்லை
காலத்தின் கணக்கு முடிவதற்குள்
மனிதன் வாழ்வின் கணக்கு புரியவில்லை

வர்த்தக‌ விளம்பரங்கள்