காலத்தின் பிடியில்
24 புரட்டாசி 2020 வியாழன் 16:25 | பார்வைகள் : 13287
இவனிடம் கேள்
இவன் சொல்லியதை
செவி மடுத்து கேட்பார் யாரோ
இவன் செப்பியதை
உடல் கூறுகளும் செவியுறுவதில்லை
ஆதி சிரம் முதல்
பாதம் இறுதி வரை
கூடாது எனச் சொன்னால்
பிணி அகன்றிடுமோ
அகமதை தன் வழியில்
அமைத்திட முடியுமா
அகம் வழியில் இவன்
செல்லாமல் இருக்க இயலுமா
ஆயினும் தன்னை அணுகியவன்
தன் மன அசைவின் படி
ஆடினால் தான் அக மகிழ்வேன்
என்பதெல்லாம் முறையாமோ
காலத்தின் கோலத்தில்
அகப்படாமல் வாழ்ந்திட தகுமோ...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan