மனிதனும் மனிதமும்
23 ஆடி 2020 வியாழன் 19:02 | பார்வைகள் : 9613
மனிதனிடம் மனிதமில்லை
என்று
எங்கெங்கும் மேடை முழக்கம்
பெருங்குரலாக ஒலிக்கிறது.
ஆனால்
மனிதன்,
மனிதனாக
வாழ்ந்தால்தானே
மனிதம் பற்றி
அவன் சிந்திக்க முடியும்?
என்கின்றன, இதர உயிர்கள்!
மனிதனை
நினைத்துப் பார்த்து
அவை வியப்படைகின்றன!
தன் குறைகளை என்றும்
ஏற்றுக்கொள்ளாத மனிதன்
பிற உயிர்களைக்
குறை கூற
பின்வாங்கியதில்லை!
இவன் கோபங்கொண்டு
பேசுவதற்குப்
பதில் கூறுவோரை
ஏண்டா பாம்புபோல்
சீறுகிறாய் என்கிறான்.
மனிதன் ஏமாற்றுவான்
தந்திரங்கள் செய்வான்
கைப்பாவையைக் கொண்டு
பிறர் குரலில்
நையாண்டி செய்வான்
அட குள்ளநரியே என்று
மாற்றாரை பேசிவிட்டு
நகைச்சுவை என்பான்.
இருந்தாலும்
மனிதன்
இறைவன் படைப்புகளில்
தனித்துவம் வாய்ந்தவன்
என்கிறார்கள்!
மனிதம்
வளரவில்லையா
மனிதன் வளரவில்லையா
என்று ஆய்வுகள்
நடந்துகொண்டிருக்கின்றன.