கண்ணாமூச்சி
                    11 சித்திரை 2022 திங்கள் 19:58 | பார்வைகள் : 18395
பால்ய நாட்களில்
புகைவண்டிப் பயணங்களி்ல் 
ஜன்னலோரம்
அமர்ந்து நான்
அசலூர் செல்கையில்
எங்கள் ஊருக்கும்
எங்கள் ஊர் 
திரும்புகையில்
அசலூருக்கும்
எதிரும் புதிருமாய்
ஓடி விளையாடும்
பச்சை வயல்களும்
நீர்நிறை தடாகங்களும்
நிழற்குடை புங்கைகளும்
விரிதலை வேம்புகளும்
விழுது கொட்டும்
ஆலங்களும்
சுவைமிகு புளியன்களும்
நெடுவளர் பனைகளும்
களிற்றின்கால் 
தென்னைகளும்
பளிங்கு நார் வாழைகளும்
இன்று
கட்டிடங்களுக்கு நடுவே
கண்ணாமூச்சி
ஆடுகின்றன 
என் கடந்த கால
நினைவுகளோடு.
                        




திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan