காலம் திரும்பி பார்க்கிறது
15 பங்குனி 2022 செவ்வாய் 09:02 | பார்வைகள் : 14705
காலம் திரும்பி பார்க்கிறது
கடந்துதான் வந்திருக்கிறேன்
தொலை தூரமாய்
களைப்பு ஒன்றும்
தெரியவில்லை
சூரியன் உட்பட
அவரவர் வேலையை
அவரவர் செய்ததால் !
உயிர்கள் தோன்றி,
மறைந்து
தோன்றி
மனித கணக்கீட்டில்
இலட்சம், கோடி
ஆண்டுகளாய்
இயற்கை கூட
தன்னை வளர்ந்து
அழிந்து
வளர்ந்து
எதுவும் என்னிடம்
இல்லை
இருக்கும் என்பவை
நாளை இல்லை
நான் என்பது
நாளா ?
நாள் என்பது
இரவும் பகலுமா?
நானே யார்
என்பது அறியாமால்
இதோ அடுத்த
நிகழ்வுக்கு
நகர்ந்து கொண்டே
இருக்கிறேன்
வெகு தூரம்தான்
வந்திருக்கிறேன்
களைப்பே தெரியவில்லை