கடலும் கரையும்

2 பங்குனி 2022 புதன் 07:04 | பார்வைகள் : 18096
கடலும் கரையும்
கடலுக்கும்
கரைக்கும்
எப்பொழுதும்
நம்பிக்கையற்ற
நட்பு தான்
இருவருமே
தள்ளு முள்ளுகளில்
கை தேர்ந்தவர்கள்தான்
கொஞ்சம்
ஏமாந்து இடம்
கொடுத்தாலும்
ஒன்றை ஒன்று
விழுங்கத்தான்
பார்க்கிறது
சில நேரங்களில்
கடல் தோற்பது
போல் பின் வாங்கினாலும்
சட்டென்று தன்
இடத்தை மீண்டு
வந்து பிடித்து
கொள்ளத்தான்
செய்கிறது
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025