பயணம்
2 தை 2022 ஞாயிறு 08:29 | பார்வைகள் : 10942
எல்லோரும்
ஓடினார்கள் ....
கதவு
தட்டினார்கள் ....
கதவு
உடைத்தார்கள் .....
நீலா
நீலா
என்னடா இப்படி .....
திட்டித்
தீர்த்தார்கள் ....
மருத்துவமனை
போனார்கள் ...
இவர்களுக்கு முன்
மருந்து
முழுவதுமாய்
உள்ளே போனதால் ....
நீலமான
உடல் மட்டுமே
மீதம் ...
“இது
மூன்றாவது முறை”
ஒருவர் சொன்னார் .........
இரண்டு முறை
உயிர்பிச்சை
தந்த காலம்
இம்முறை
உடலை மட்டுமே
பிச்சை போட்டது ....
அந்த வீட்டுக்கு
அடிக்கடி
போய் வரும்
எனக்கு ...
என் கண்களில்
நீர் முட்டியது ...
சொல்லமுடியா
சொகமொன்று
என் நெஞ்சுடைத்தது .......
அழுது தீர்த்த
அந்தக் குடும்பம்
அனாதையாய் போனது ...
இவ்வளவு
சுயநலமா காதல் ...
மனமுதிர்ச்சி
வருமென்றார்களே ......
இவ்வளவு
கோழைத்தனமா
காதல் ...
தைரியம் தருமென்று
சொன்னார்களே ....
பெற்றோர்
புறக்கணிப்பா
காதல் ....
உலகப்
புறக்கணிப்பா
காதல் ....
ஒருவகை
அரவணைப்பு
என்றார்களே .....
அவளோடு மட்டுமே
சுருங்கிப் போதலா
காதல் ....
மன வளர்ச்சி
வருமென்றார்களே .....
இவ்வளவு
சோகமானதா காதல் ...
காதல்
சுகமென்றார்களே .....
இருபத்தி மூன்று
வயதில்
காவு போகவா
அந்த காதல்
முளைத்தது ...
அவனை மட்டுமே
நம்பி நின்ற குடும்பம்
அனாதையாய் போகவா
அந்தக் காதல்
முளைத்தது ....
அடுத்த
சில நாட்களில் .....
“ வாழப் போன
இடத்தில்
அந்தப் பெண்ணும்
தூக்கோடு தூக்கிப்
போனாள் “ ....
இந்தச் செய்தி
என் நெஞ்சில்
ஆணியடித்தது ....
“ எதன்பொருட்டு
இவர்கள் பயணம் “
இந்தக் கேள்வி
என் நெஞ்சு
பிசைந்தது ....
காதல் பற்றி
யாரும்
உன்னதமென்று
உயர்வாய் பொய்
சொன்னால் ...
எனக்கு
விடை தெரியாத
இந்தக் கேள்விகள்
மட்டுமே
அலையடிக்கும் ...
காதலென்றால் .....
சுயநலமா ....
பெற்றோர்
புறக்கணிப்போ ....
கோழைத்தனமோ ....