ஓர் இரவுப் பொழுது

9 ஐப்பசி 2021 சனி 09:53 | பார்வைகள் : 14903
எல்லா
நட்ச்சத்திரங்களும்
எதிர்பார்த்து
காத்து நிற்க
அடிவானத்தில்
விழுந்துகிடக்கும் நிலவு ....
எல்லா
மனிதர்களும்
தூங்கிப் போக
என்னை மட்டும்
தலை கோதி
நலம் விசாரித்து
விட்டுப் போகிற
என் வீட்டுமொட்டை மாடிக் காற்று .....
தலை சாய்ந்து
படுத்தால்
நாடு சுற்றிப் பார்க்கிற
ராஜாக்களாய்
வெண் கொற்றக் குடையின்
கீழ் உலாவருகிற
வெண் மேகங்கள் ...
தூங்கப் போகிற
பறவைகளின்
இலவச இசைத்தாலாட்டுகள்.....
வாழ்க்கை
இவ்வளவுதானென்று
புரியவைக்கிற
நிசப்தம் ....
எத்தனை
காசு கொடுத்து
இந்த
அலட்டிகொள்ளாத
அலகுகளை
விலைக்கு வாங்க ...
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025