Paristamil Navigation Paristamil advert login

வர்ணஜாலம்

வர்ணஜாலம்

3 ஐப்பசி 2021 ஞாயிறு 17:38 | பார்வைகள் : 13870


கிணற்றுக்குள்

 
நிறைந்த நீருக்குள்
 
விரிந்த வானம்
 
விண்ணில் விளையாடும்
 
கருமேகக் கூட்டங்கள் 
 
குளிர்ந்த சூரியன்
 
கிணறு விளிம்பில்
 
காணும் மரக்கிளைகள்
 
எட்டிப் பார்த்தபோது
 
என் முகம்!
 
கிணற்று நீரில் 
 
சிறுவன் போட்ட
 
சிறுகல் விழுந்துபோது
 
சூரியன் கருமேகங்கள் 
 
வானம்  மரக்கிளைகள்
 
என் முகம்தான்
 
நீர்த் துளிகளாக தெறித்தன!
 
 
 
சிறுகல் மூழ்கியபின்
 
அமைதியான நீரில்
 
மீண்டும் கிணற்றுக்குள்
 
நீருக்குள் வர்ணஜாலம் !
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்