Paristamil Navigation Paristamil advert login

என் நண்பன் இவன்...!

என் நண்பன் இவன்...!

19 புரட்டாசி 2021 ஞாயிறு 09:07 | பார்வைகள் : 13942


என்னுடனே வாழ்வில்

 
பயணித்தவன்
 
இவன்  
 
இன்ப துன்பங்களை
 
இவனிடம் சொல்லாமல்
 
இருந்ததில்லை
 
திருமணம் உட்பட
 
இதனால் பல பேர்
 
என்னை பைத்தியம்
 
என்று
 
சொல்லியிருக்கிறார்கள்
 
ஆனால் நீ
 
என்னிடம் இதுவரை
 
ஒரு வார்த்தை
 
கூட பேசியதில்லை 
 
இருந்தாலும் என் வயது
 
இவனுக்கு
 
இது போதும் எனக்கு
 
என் தந்தை தாய்
 
இருவரையும் நீயும்
 
பார்த்திருக்கிறாய் 
 
இப்பொழுது நடப்பதை
 
பாரேன் !
 
இருவரையும்
 
பிரித்து என்னை
 
மயானத்திற்கும் உன்னை
 
விலைக்கும்
 
அனுப்பி விட்டார்கள் 
 
எண்பது வருட
 
மரமாம்
 
நல்ல விலை
 
அவர்களுக்குள் பேசி
 
கொண்டு 
 
மயானத்திற்கு என் உடல்
 
சென்றது
 
உன் பிரிவால்தான் 
 
என் பிரிவை
 
குடும்பத்தினர்
 
வயதின் முடிவு என்று
 
முடித்து விட்டார்கள் 
 
இருந்தும் மகிழ்ச்சி
 
இது வரை வாழ்ந்த
 
என் உடல் எரிக்கவோ
 
புதைக்கவோ 
 
ஆனால் !
 
நீ மட்டும் அதிக
 
விலை கொண்டு
 
உருமாறி இந்த
 
உலகத்தில் உலவ
 
போகிறாய்
 
உனக்கு பேசும்
 
சக்தி
 
என்றாவது கிடைத்தால்
 
எனக்கு மனிதன்
 
ஒருவன் நண்பனாக
 
இருந்தான்  
 
அறிவித்தால் போதும்
 
இந்த பூவுலகில்
 
வாழ்ந்து சென்ற
 
பயனை அடைந்து
 
விடுவேன்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்