Paristamil Navigation Paristamil advert login

அம்மாவின் செடி

அம்மாவின் செடி

5 புரட்டாசி 2021 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 13296


அம்மாவை

 
 
தனியே விட்டு திரும்பியபோது
 
 
கிறீச்சிட்டு மூடிய அந்தக்
 
 
காப்பகத்தின் கதவுகளுக்கு
 
 
வயசாகிவிட்டதா வசைபாடியதா
 
 
புரியவில்லை
 
 
விடிந்தபோது
 
 
வாடிப்போய் இருந்தன பூக்கள்
 
 
அதன் பின்
 
 
என்னால் நீரூற்றப்படுவதை
 
 
விரும்பாமலே முடிந்து போனது
 
 
அம்மா வளர்த்த அந்தச்செடி

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்