ஐந்து புரவலர்கள்
1 ஆவணி 2021 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 11286
மழை
கார் மேகமாம் நற்றாயும்
செஞ்சூரிய தந்தையுமே
ஒருசேர்ந்தே உருவேற்றிய
பெரும் பூமியின் அருங்காதலி!
பூமி
பொறுத்தே ஆண்டிடுமே,
வறுத்தே வதைத்திடினும்!
பசுமை துகில் உறித்திடினும்,
பகைமை கொள்ளா தாயவளே!
காற்று
இலைகளைத் தழுவி
கிளைகளை வருடி
மரங்களின் ஊடே
மனங்களை மயக்கும், உருவற்ற உறவு.
நெருப்பு
இல்லாதெனில் இல்லை ஒன்றும்
பொல்லாதென்றே பொசுக்கும் தீ !
சாட்சிக்கும் பொறுப்பாகும்
மாட்சி மிகு நெருப்பாகும்.!
ஆகாயம்
அனைத்தும் சுழியமே,
உணர்த்தும் ஆகாயமே!
அகன்றே விரிந்துடும்,
பகன்றிடும் வெறுமையே !