சொற்கள்..!!
                    6 ஆடி 2019 சனி 16:13 | பார்வைகள் : 14723
கல்லால் அடி பட்டாலும்
கனி மரங்கள்
இனிய கனிகள்  
கொடுக்க மறுப்பதில்லை!
உலகில்
கற்கள் போன்று
சொற்களால் உன்னை அடித்தாலும்
கனிவான சொற்களை
இனிமையாகப் பேசுங்கள் !
துன்பம் என்னும் அலை வந்து
படகை அலைக்கலைத்தாலும்
துடுப்பு என்னும்
இனிய சொற்களால் – உன்
வாழ்க்கைப் படகை செலுத்து
அமைதியாகக் கரை வந்து சேரும் !
                        




திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan