குறுஞ்செய்தி...!
                    9 ஆனி 2019 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 15002
மழை இரவின் 
பெரும்தூக்கமும் தராத சுகம்...!
வெயில் நாளில்
மரநிழலும் கொடுக்காத ஆனந்தம்...!
கடும் தாகத்தில் 
குட நீரும் தீர்க்காத தாகம்...!
தென்றல் தொட்ட பொழுதில்
தேகமும் உணராத புத்துணர்சி...!
நகைச்சுவை நிரம்பிய
திரைப்படமொன்று வழங்காத புன்னகை...!
இவையெல்லாம் எனக்கும்
நொடிப்பொழுதில் கிடைக்கிறது...!
நீ எனக்கனுப்பும்
“ஹாய்” என்ற குறுஞ்செய்தியில்...9






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Annuaire
Scan