Paristamil Navigation Paristamil advert login

இன்று பிறந்தது!

இன்று பிறந்தது!

1 சித்திரை 2019 திங்கள் 15:26 | பார்வைகள் : 12599


பெரும் பதற்றத்தோடு
வாசலில் காத்திருக்கும் 
மனிதர்களில்லை...!
 
வலிகளையெல்லாம்
வாய் வழியே வெளியேற்றும்
அழுகை சத்தமுமில்லை...!
 
மருந்து பெட்டிகளோடு அலையும்
மருத்துவர்களுமில்லை...!
 
நலமாயிருக்க வேண்டுமென்ற
பிரார்த்தனைகள் இல்லை...!
 
இனிப்பு பெட்டியோடு நிற்கும்
நண்பர்களுமில்லை...!
 
ஆனாலும் இன்று பிறந்தது...!
காதலொன்று...

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்