கன்னித்தமிழும் கத்துக்குட்டியும்
30 புரட்டாசி 2018 ஞாயிறு 13:04 | பார்வைகள் : 14039
கன்னித்தமிழ் நீ
கத்துக்குட்டி நான்
லெமூரியா மலர் நீ
தும்பி நான்
வல்லினம் நீ
மெல்லினம் நான்
இடையினமாய் நம் காதல்!!
வலி மிகும், மிகா இடம் நீ
ஒற்று பிழை நான்
உன்னை நீங்கினில்
சுற்றும் பிழை தான்
இலக்கணம் நீ
இலக்கியம் நான்
இலக்கணம் இல்லையேல்
இலக்கியம் ஏது??
அணிகலன் மாலை நீ
அளபெடை நான்
உயிர் நீ
மெய் நான்
உயிர் இல்லையேல்
மெய் சடலமே






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan