Paristamil Navigation Paristamil advert login

காற்றே பதில் சொல்!

காற்றே பதில் சொல்!

23 புரட்டாசி 2018 ஞாயிறு 15:21 | பார்வைகள் : 9795


அங்கு

இங்கெனாதபடி
எங்கும் வீசும் காற்றே
குளிர் காற்றே
வாடைக் காற்றே
தென்றல் காற்றே ! 
 
நீ
புயலாக மாறும்போது
தொண்டர்கள் உழைப்பில்
அரசியல் தலைவர்கள்
அடுக்கு மாடிகளில்
ஆனந்தமாக தூங்கும்போது..
 
புயல் காற்றே
அப்பாவி ஏழை மக்கள்  
வாழும் குடிசைகளை
வாரி எடுத்து
எறிந்து விடுகிறாயே
புரியும்படி பதில் சொல் !

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்