Paristamil Navigation Paristamil advert login

சாலையோர ஓவியன்...!!

சாலையோர ஓவியன்...!!

9 புரட்டாசி 2018 ஞாயிறு 16:26 | பார்வைகள் : 14080


அழகிய விழி ஓரம்
மை இட்டு !
தடித்து சற்று வளைந்த
செவ்விதழில்
சாயம் இட்டு
இடை மேல நழுவி
விழும் கச்சையினை
இழுத்து சுருக்கிட்டு!
 
உருண்டு திரண்டு
கீழிறங்கும் காலுக்கு
கொலுசு இட்டு
அழகு மயிலொன்றை அருகில்
வைத்து,அவள் கையில்
ஒரு மலரை கொடுத்து! 
 
கற்பனை செய்தவைகளை
வரைந்து முடித்து களைத்துப் போய்
எப்பொழுது
படத்தின் மீது காசு விழும்
காத்திருந்தான்  சாலையோர ஓவியன்.!

வர்த்தக‌ விளம்பரங்கள்