Paristamil Navigation Paristamil advert login

போலி முகங்கள்

போலி முகங்கள்

16 மாசி 2020 ஞாயிறு 12:07 | பார்வைகள் : 14502


ஒவ்வொருவருக்குள்ளும் துயில் கொண்டிருக்கும்
உரியநேரத்தில் விழித்து எழும்
எல்லோரும் அப்படியா என நினைக்கும்முன்னே
நாமும் இப்படித்தான் என நினைத்தல்நன்று
 
ஊருக்கு முன்னே ஒருமுகம் காட்டும்
வீட்டுக்குள்ளே ஒருமுகம் காட்டும்
உறவுக்குள்ளே ஒருமுகம் காட்டும்
நட்புக்கு முன்னே ஒருமுகம் காட்டும்
 
உண்மை முகத்தை காண்பது அரிது
எல்லாம் போலியாய் ஆன பின்னாலே
போலிகளுக்குள் பலர் சிக்கிச் சிக்கி
தன்முகமிழந்து அவரும் போலியானாரோ...!
 
உலகில் இன்று எல்லாம் போலி
கண்ணின் முன்னே நடப்பதும் போலி
காதில் கேட்கும் பலசெய்தி போலி
வாயில் பேசும் பேச்சுக்கள் போலி
 
இதனை விட்டு வருதல் கடினம்
மீண்டு வந்தால் கிடைக்கும் நன்மை
போலியை விட்டு உண்மைக்குள் சிக்க‌
வைத்திடல் தானே வாழ்க்கைக்கு நன்று

வர்த்தக‌ விளம்பரங்கள்