Paristamil Navigation Paristamil advert login

அழகிய ஹைக்கூ....!!

அழகிய ஹைக்கூ....!!

24 ஐப்பசி 2017 செவ்வாய் 13:24 | பார்வைகள் : 9493


சுமையான போதும் 
பாதுகாப்பு 
நத்தையின் கூடு !
 
கடவுச்சீட்டு விசா இன்றி 
கடல் கடந்து பயணம் 
பறவை !
 
சேற்றில் மலந்தும் 
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !
 
குரல்   இனிமை 
குயில்
நிறம் கருமை !
 
அடைகாக்கா அறியாவிடினும் 
காக்காவின் தயவில் பிறப்பு 
குயிலினம் !
 
நம்பமுடியாத உண்மை 
மானை விழுங்கும் 
மலைப்பாம்பு !
 
 
இனிமைதான் 
ரசித்துக் கேட்டால் 
தவளையின் கச்சேரி  !
 
இனிய அனுபவம் 
நனைந்து பாருங்கள் 
மழை !
 
மழையில் நனைந்தும் 
கரையவில்லை வண்ணம் 
மயில் தொகை !
 
நிலா வேண்டி 
அழும் குழந்தை 
அமாவாசை !
 
முதல் மாதம் கனமாக 
கடைசி மாதம் லேசாக 
நாட்காட்டி !
 
மீண்டும் துளிர்த்தது 
பட்ட மரம் 
மனிதன் ?
 
தோட்டம் அழித்து
கட்டிய வீட்டில் 
செயற்கை  மலர்கள்
 
பாடுவதில்லை 
நாற்று நாடுவோர் 
பண்பலை வானொலி !
 
ரேகை  பார்த்தது ஈசல் 
சொன்னார் சோதிடர்
ஆயுசு நூறு !
 
மணி  காட்டாவிட்டாலும் 
மகிழ்ச்சி தந்தது 
மிட்டாய் கடிகாரம் !
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்