Paristamil Navigation Paristamil advert login

நேசிப்பாய் என எழுதுகிறேன்...!!!

நேசிப்பாய் என எழுதுகிறேன்...!!!

11 ஆவணி 2017 வெள்ளி 14:50 | பார்வைகள் : 12884


ஆசை ஆசையாய் எழுதுகிறேன்
 
ஆசையில் நானும் எழுதுகிறேன்
 
அன்பால் நானும் எழுதுகிறேன்
 
உன் அன்பிற்காக எழுதுகிறேன்
 
பார்த்துப் பார்த்து எழுதுகிறேன்
 
நீ
 
படித்துப் பார்க்க எழுதுகிறேன்
 
நினைத்து நினைத்து எழுதுகிறேன்
 
உன்
 
நினைவில் நிற்க எழுதுகிறேன்
 
நேசத்தோடு எழுதுகிறேன்
 
நீ
 
நேசிப்பாய் என எழுதுகிறேன்
 
உயிரை கொண்டு எழுதுகிறேன்
 
உன்னை
 
உயிராய் எண்ணி அனுப்புகிறேன்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்