நாதியற்ற தெருவோரக் காகிதம் நான்
26 ஆடி 2017 புதன் 15:32 | பார்வைகள் : 10075
நாதியற்ற தெருவோரக் காகிதம் நான்
நாற்பதில்
நாலுகழுதை வயதாய்!
நாதியற்று
நடுவீதியோரக் காகிதமாய்!
காற்றடிக்கும் திசை நகர்ந்து!
வலமும் இடமுமாய்
மேலும் கீழுமாய்
இலக்கின்றி சுழன்றடிக்கும்
என் வாழ்வு!
இது இயற்கையின் விதியா?
இல்லை
இயற்றியவன் சதியா?
இன்றுவரை புரியவில்லை
என் வாழ்வில்!
மொத்தத்தில் தெருவோரக்
காகிதமும் நானும் ஒன்றே!
பயன் உள்ளவன் எடுத்தால்
என்னுள் அழகிய வாழ்வியல்
ஒவியம் வரைவான்!
இல்லை!
பாதை பெருக்குபவன்
கைகளில் சேர்ந்தால்
கூழங்களாய் ஓர் நாள்
எரிக்கப்படுவேன்!