Paristamil Navigation Paristamil advert login

கோபம்.....!!!

 கோபம்.....!!!

20 ஆனி 2017 செவ்வாய் 15:35 | பார்வைகள் : 12906


உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிவிடுவதாய்க் கருதிய
எச்சரிக்கையின் இறுக்கங்களை
நம் முகங்களில் படரவிட்டு
ஒருவரையொருவர் நம்பாமலேயே
ஒரு நீண்ட பயணம் முடித்து
விரோதத்திற்கும் நட்பிற்கும் இடையே
நாம் விலகிநின்று
பரஸ்பரம் சிரித்துக் கொள்கையில்
கூடவே நம்மைப் பார்த்து
கைதட்டி சிரித்துப் போகும்
நாம் நழுவவிட்ட காலங்களும்!
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்