Paristamil Navigation Paristamil advert login

தொலைந்து போன நிமிடங்களில்…!

தொலைந்து போன நிமிடங்களில்…!

20 வைகாசி 2017 சனி 16:08 | பார்வைகள் : 12858


 நான் தொலைந்து போன

நிமிடங்களில் தேடிப்பார்க்கிறேன்…!
என்னை தொலைய வைத்த
வலிகளின் நினைவுகளை…!
 
கண்ணுக்கெட்டாத தூரமாகிபோனது
நினைவுகள் அனைத்தும்…!
மனதினில் ஒரு அமைதி
மௌனத்தின் சங்கமம்….!
 
பசி எடுக்கவில்லை
உறக்கம் பிறக்கவில்லை…!
மனமெங்கும் ஒரு நிசப்தம்
என்னவென்று விவரிப்பேன்…!
 
ஆர்ப்பரிப்பில்லாமல் அமைதியாக
கடலன்னை என் பாதங்களை தழுவினாள்…!
இறைச்சல் இல்லாமல்
தென்றலும் என்னை வருடியது…!
 
பூக்களின் வாசமும் என்னை
தேடி வந்து நுகர செய்தது…!
புள்ளினங்களின் கீச்சொலிகளும்
என் காதில் இதமாக கானம் பாடியது…! 
 
பிள்ளைகளின் கிள்ளைமொழிகளும்
என்னை பரவசப்படுத்தியது….!
மௌனமாய் அமைதியான
சொர்க்கத்தில் குடியிருக்கிறேன் நான்
இன்னல்கள் என்னைத் தீண்டாதவாறு….!
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்