கடவுளுக்கே பொறுக்காது....!!

19 சித்திரை 2017 புதன் 17:51 | பார்வைகள் : 13648
சும்மா கிடந்த வைரவரும்
சுத்துமதிலோடு கோபுரமும்
வந்துபோக வடிவான வீதிகளும்
கண்டிறோட்டும் A9 பாதையும்
ஊருக்குள் பெரியபெரிய வீடுகளும்
வளவே தெரியாமல் வாகனங்களும்
பெருங்கடைகளும் வசதிகளும்
சொல்லவார்த்தை இல்லை என்பார்
ஊருக்குப்போய்வந்த பலர் இங்கே
வெளிநாட்டுப்பணத்தை அள்ளி இறைச்சு
கோயில்த்திருவிழா கோலங்களும்
அள்ளிப்போட்டு நகைநட்டும்
அழகழகான சேலைகளும் கட்டி
உபயகாரர் என்று முன்னின்று வடிவுகாட்டி
பலர்சொன்ன பவறான கோமாழித்தனம்
வாழவழியின்றி பலர் அங்கு பட்டினியே
வாழ்பிளந்து பலர்சோற்றுக்கு ஏங்கிநிற்க்க
வேஷம் போட்டமனிதரெல்லாம்
மனிதர் என்று இனியும் ஊர்நம்புமா?
போட்ட ரவுசர் கழட்டாமல்
கார் ஏறி பவுசுகாட்டும் கோலம்
கடவுளுக்கே பொறுக்காது ஏற்க்காது
காணிச்சண்டைகளும் கத்திக்குத்து
வாள்வெட்டும் தண்ணி அடிக்கும்
தறுதலைகளும் தடுமாறிப்போன நாசம்
அரைமுழம் அரக்கி எல்லைபோட்ட சண்டை
பெரிதானதாம் அடிதடிகளாம் வாள்வெட்டுக்களாம்
அட நாசமறுவாரே எங்கள் தாய்மண்ணின்
எல்லையே போகுதடா சிந்தனையில்லையோ
சீர்கெட்டுப்போக காலமாச்சோ.....
- ஈழத்தமிழ்விழி மயிலையூர் இந்திரன்
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025