பிரசவம்.....!!!
3 பங்குனி 2017 வெள்ளி 17:34 | பார்வைகள் : 10041
உயிரை சாவின் எல்லைக்கு
எடுத்தச்செல்லும்
அந்த வயிற்று வலியில்
எமக்கு என்ன தெரியும்
வைத்தியர் சொல்வதையே
கிரகிக்க முடியாத நிலைமை.
நா வரண்டு போகும்
தொண்டை கட்டும்.
மசில்சுகள் வலி எடுக்கும்.
யாரோ களுத்தை பிடித்தே
அமுக்கும் நிலையாக இருக்கும்.
கட்டிலால் எழும்பி
ஓட முயல தோன்றும்.
மலம் கழிக்க வேண்டும
என்ற உணர்வு தோன்றும்.
வார்த்தைப்பகிர்தலுக்கே
அங்கு இடமில்லை.
ஏலுமானால் கைப்பாசை
சில சமயம் ஒத்துழைக்கும்.
மூச்சே வர மறுக்கும்
ஒரு சின்ன வினாடிக்குள்
மூச்சு மீண்டும் வரும்
ஆனாலும் கழைத்த கழைப்பில்
மூச்சு மீண்டும் அறுந்தே போகும்
மீண்டும் சில அறுபட்ட வினாடித்
துளியில் தம்மடக்கி
மூச்செடுக்க முயல்வோம்.
முடியவே முடியாது.
அருகில் நிக்கும
கணவரை எட்டிப்பிடித்தால்
சில சமயம் மூச்சு வந்து விடுமோ
என மனசு சொல்ல தம்மடக்கி
கை எட்டிப்போகும்
மீண்டும் சோர்ந்து விடும் கைகள்.
மீண்டும் கைப்பாசை கை தாவும்
தண்ணி என பெருவில்
கொண்டு வாயருகில் போகுமுன்
மூர்ச்சையாகும் தருணம்
மீண்டும் வந்துவிடும்.
கைப்பாசையும் மூர்சையாகும்
மயக்கம் வந்து வந்து போகும்
இறுதிக்கட்டத்தில்
முற்றுமுழுதாக மூர்ச்சையாகி விடுவோம்.
உயிர் இருக்கும் உணர்வு இருக்கும்
அப்பப்போ வயிறு இறுகி இறுகி
உடல் பின்பக்கமாக வழையும்.
கண் சொருகும்.
அப்பப்போ விழித்துப்
பாக்க தோன்றும்.
ஆனாலும் முடிவதில்லை.
கத்த முடிவதில்லை
அசைய முடிவதில்லை.
உடலோ சோர்ந்து
துவண்டு
அதை எடுத்துரைக்க
வார்த்தை கள்
என்னிடம் இல்லை.
குழந்தை வருவதை
கருவிகள் காட்ட
அவசரம் அவசரம்
எல்லோரிலும் அவசரம்
இறுதியாக சேர்த்து வைத்திருந்த
மிச்ச ¬தைரியத்தையும
பிய்ந்த உயிரையும்
ஒண்டாய் திரட்டி
வில்லாய் வழைய
குழந்தை மெதுமெதுவாக
தாதி கை தாவும்.
குழந்தை அழும் சத்தம்
மட்டும் எம் செவி வழி பாயும்.