அழுதால் காதல் வற்றிப் போகுமா....?
1 சித்திரை 2016 வெள்ளி 00:00 | பார்வைகள் : 9731
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
என்றிருந்த
வசந்த காலம்
இன்று
வருத்தப்படும்
இலையுதிர் காலம்.
காதல் ஒன்றும்
அழுதால் வற்றி போக
கண்ணீர் குளமல்ல.!
அழித்து மறைக்க கூட
கருப்பு ஓவியமல்ல
இந்த வெள்ளை மனதில்...
வெளியில் தெரியாமல்
உள்ளுக்குள் நடுங்குகிறேன்..
இருந்தும்
தீராத ஆசையும் தீய்ந்த நெஞ்சும்
உன்னை மறக்க இயலாமல் ...
நீ இல்லை என்பதில் உன்னை
தேடிப்பார்ப்பேன்..
சுகமாய் இருக்கும்..!
தேடிக்கிடைத்ததும்
நீ இல்லை என்பதால் உன்னை
நிரப்பிப் பார்ப்பேன்..
வலியாய் இருக்கும்...!
நம் காதல்
இனித்ததோ, கசந்ததோ,
அது கடந்த காலம்.
நினைவில்
பாலாய் சுரக்கிறதே
தேனாய் இனிக்கிறதே
அக்காதல்...
நான்
என் செய்வேன்....????
- செல்வமணி