காதல் செத்து போச்சு காமம் கலாச்சாரமாச்சு...!
9 மாசி 2016 செவ்வாய் 18:36 | பார்வைகள் : 10038
பிரபஞ்சம் எங்கும்
பரந்து கிடக்கிறது
தொழில்நுட்பம்
கூட்டுக் குடும்பங்கள்
துருவங்களாகும் பரிதாபம்
பொய்யான சிரிப்பும்
போலியான பாசங்களும்
அளவில்லாம்
அள்ளிக் கொட்டுக்கிறது
சமூக வலைத்தளங்கள்.
காலை வணக்கம் முதல்
இரவு வணக்கம் வரை
ஆதிக்கம் செலுத்தும்
அழகழகான கைப்பேசிகள்.
இரவு வேளையில்
பெண்களின் ஆடை விலக்கவும்
ஆண்களின் தாக்கம் தீர்க்கவும்
தொலை தூரமன்றி
படுக்கை அறையை நெருக்கமாக்கும்
புதிய கண்டுபிடிப்புக்கள்
எண்ணில் அடங்கா வைரஸ் போன்று
இன்று இளம் பெண்களில்
மனங்களும் மானங்களும்
மலிவு விற்பனையில்
காதல் இன்று செத்துப் போச்சு
காமம் எங்கும் கலாச்சாரமாச்சு
மானத்தை அடகு வைக்கும் பிள்ளைகளால்
தூக்கில் தொங்கும் பெற்றோர்
அதனையும் அழகாக
செல்பியாக அழகுபடுத்த முகப்புத்தகம்
தொழில்நுட்பம் தந்த
வரத்தினால்
நாசமாய் போகும் இளைய சமுதாயமே
என்று இதனை புரிந்து கொள்வாய்.....!