கண்ணீரின் சில துளிகள்!
14 தை 2016 வியாழன் 08:30 | பார்வைகள் : 9840
எப்பொழுதும் அழகாய் விடியும்
அந்த காலை அழுதுக் கொண்டே
பிறந்தது!
அந்த காலை பல கனவுகளையும்
பல கற்பனைகளையும்,
பல ஏக்கங்களையும்
கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துக்
கொண்டே பிறந்தது!
நேற்றைக்கும் இன்றைக்கும்
நிறைய வித்தியாசங்களை
சுமந்தது அந்த காலை!
நேற்றைய இரவு என் இறுதி
இரவு என்பது தெரியாமல் போனது !
நான் அங்கே இறக்கவில்லை !
கொல்லப்பட்டுக் கொண்டிருந்தேன் !
கத்தியை விட கூர்மையான ஆயுதம் அது !
என்னை இறுக அணைத்த கரங்கள் கொஞ்சம்
கொஞ்சமாய் விலகத் தொடங்கியது !
நான் விழி பார்க்க விரும்பாத
கரணங்கள் எல்லாம்...
என் விழி வழியே, செவியில் நுழைக்கப்
பட்டுக்கொண்டிருந்தது !
நான் அனுப்பிய குறுஞ்செய்திகள் எல்லாம்
உன்னிடம் சேராமல் என்னிடமே தஞ்சம்
புகுந்தது !
உனக்கான என் கண்ணீரெல்லாம்
எனக்காய் அழுதது !
அந்த காலை பல கனவுகளையும்
பல கற்பனைகளையும்,
பல ஏக்கங்களையும்
கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துக்
கொண்டே பிறந்தது !
- கார்த்திக்