மழை இரவு...!!!
5 ஆவணி 2018 ஞாயிறு 16:12 | பார்வைகள் : 10403
மழையே மழையே
மகிழ்ந்து மகிழ்ந்து
குழந்தைபோல் விளையாட
விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஏணி அமைக்க வா !
மழையே மழையே
பகலவன் சூடு தணிய
விண்ணில் விளையாடும்
கருமேகமே மழைத்துளிகளை
மண்ணுக்கு மலர்போல்
இரவில் அள்ளி வீசு !
மழையே அந்தி மழையே
விண்ணில் சிந்து பாடி
மண்ணில் நொந்த உயிர்கள்
மகிழ்ந்து வாழ – நீ
மண்ணில் வந்து விளையாடு!
மழையே இரவு மழையே
மண்ணில் நீ வீழ்ந்தால்
மரம் செடிகொடிகள்
மகிழ்ந்து தலையாட்டும்
விண்ணில் தோன்றும்
முழுநிலவு மறைந்து
நின்று குடை பிடிக்கும் !
இரவில்
பெய்யும் மழைத்துளிகள்
ஏழையின் குடிசையில்
தலையாட்டும் மண்பானையில்
இனிய ஜலதரங்கம்
விடிய விடிய இசைக்கும் !