நெருப்பின் தாகம்!

22 ஆடி 2018 ஞாயிறு 13:12 | பார்வைகள் : 14246
நெருப்பே
உன்னையே தொட்டுப்பார்
சூரியனைத் தீண்டிப் பார்
சுடுமென்று
உனக்கு தெரியும் !
நெருப்பாக
வீட்டில் உணவை ஆக்காமல்
காடு மேடு அலைந்து
உயிரை அழித்து
உன் தாகம் தணிக்கிறாயே !
அழிக்கும்
நெருப்பாக இருந்து
அங்கிங்கு அலைந்து திரிந்து
குரங்கணி காட்டில்
மரம் செடிகொடிகள் மீதும்
மனித உயிர்கள் மீதும்
உனக்கேன் உயிர்த் தாகம்!
நெருப்பில்
கள்ளமில்லா மழலைகளை
கும்பகோண பள்ளியில்
கொன்று குவித்தாயே
உன் தாகம் தணியவில்லையா !
நெருப்பே
உன் தாகம் தணிக்க
ஏழை வீட்டு அடுப்பில்
அணையா விளக்காக இரு !
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025