Paristamil Navigation Paristamil advert login

நிழலில் தேடிய நிஜம்...!!

நிழலில் தேடிய நிஜம்...!!

8 ஆடி 2018 ஞாயிறு 15:27 | பார்வைகள் : 9388


சுட்டெரிக்கும் சூரியன்
வானில் பவனி வந்து
நிழலில் நிஜம் தேடி
சுழலும் பூமியில்
சூரியக்கதிர்களால்
முத்தமிடுகின்றன !
 
விண்ணில் மிதக்கும்
வட்ட முழு நிலா
மண்ணில் பரவும்
ஒளி வெள்ளத்தில்
நிஜத்தை நிழலில்
தேடி அலைகிறது !
 
ஆகாயத்தில்
அள்ள அள்ள
குறையாத சுடர் விடும்
நட்சத்திர பூக்கள்
நிலத்தின் மேல்
ஒளிப்பூக்களை வீசி
நிழலில்
நிஜத்தை தேடுகின்றன !
 
அரசியல்வாதிகள்
மனசாட்சி நீதி நேர்மை
முத்துக்களை
ஊழல் கடலில் மூழ்கி
தேடித் பார்க்கின்றனர் !

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்